< </script> MAS PHARMACY AND HEALTH REVIEW: தமிழ் < </script> <

Pages

Translate

தமிழ்



இந்த தமிழ் மொழிபெயர்ப்பில் நுண்ணுயிர் எதிர்வேதிகள்  அல்லது ஆன்டிபயாட்டிக்குகள் பற்றி ஒரு தொகுப்பு கேள்வி பதில் வடிவத்தில் காணலாம் :-

கோவிட் -19 தடுப்பு மருந்துகள்-செய்திகள் புதுப்பிப்பு :-


படம்-1

அமெரிக்காவின் புது மருந்துக்கம்பெனியான மோடெர்னா  கடந்த 16-11-20 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் கோவிட் -19 க்காக mRNA துணுக்குகளை கொண்டு அவர்கள் தயாரித்த தடுப்பு மருந்து 94.5% வெற்றியடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள் 
பொதுவாக வேக்சின்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
இரண்டு  வகைப்படும் அவை 
2.மரபணு வேக்சின்கள் 
சாதா வேக்சின்கள் எத்தனை  வகைப்படும்? அவை யாவை?
1.இறந்த கிருமிகளை கொண்ட வேக்சின் (Dead Vaccine)-e.g கோவாக்சின் (இந்தியா)
2.வீரியம் குறைக்கப்பட்ட வேக்சின் (Attenuated Vaccine)-e.g  AZD-1222 (பிரிட்டன்)
3.கூட்டு வேக்சின் (Conjugated Vaccine)
4.நீர்த்த கிருமி நஞ்சு கொண்ட வேக்சின் (Toxoids)
mRNA வேக்சின்கள் என்றால் என்ன?
பொதுவாக நோய்க்கான தடுப்பு மருந்துகள் அந்த நோய் கிருமிகளையோ,அல்லது அந்த கிருமிகளின் நச்சுகளையோ கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது
ஆனால் mRNA வேக்சின்களில் நச்சு கிருமியோ அல்லது நச்சுப்பொருளோ எதுவும் இருக்காது. மாறாக mRNA என்ற மரபணு துணுக்குகள் மட்டுமே இருக்கும் 
mRNA துணுக்குகளை அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள்?
கோழிமுட்டையின் கரு போன்ற உயிருள்ள செல்களிலிருந்து பெறுகிறார்கள். எனவே இது மிகவும் பாதுகாப்பானது. மிகவும் மலிவானது. 
mRNA வேக்சின்கள் இந்திய சீதோஷ்ணநிலைக்கு பொருத்தமானதுதானா ?
இல்லை என்றுதான் இந்திய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
காரணம் இந்திய வெப்ப நிலையில் இந்த வேக்சின் இரண்டு மணி நேரம்தான் தாங்கும் என்கிறார்கள்                                      
இதை பிரிஜ்ஜில் வைத்தால் 30 நாட்கள் வரை யும் -70 செல்ஸியஸ் வரை உறைநிலையில் வைத்தால் ஒரு வருடம் வரை பாதுகாக்கலாம் என்கிறார்கள் 
ஆனால் கிருமிகளைக்கொண்டு சாதாரணமாக தயாரிக்கப்பட்ட வேக்சின்களுக்கு இந்த பிரச்சினை இல்லை.
படம்-2

mRNA வேக்சின்கள் தயாரிக்கும் முறையை சுருக்கமாக படங்களின் மூலம் விளக்கு :-மேலே உள்ள படத்தை கவனியுங்கள். ஒரு கோழியின் முட்டைக்கருவில் இருந்து முதலில் DNA வை பிரித்து எடுக்கின்றார்கள் 
பிறகு அந்த DNA வை வார்புருவாக்கி அதை ஒரு அசல் ஹார்ட் டிஸ்க் போல் பயன்படுத்தி அதிலிருந்து ஒன்று முதல் பல mRNA களை DNA சார்பு RNA பாலிமரேஸ் (DdRP) நொதியின் உதவியுடன் உருவாக்குகிறார்கள் 
அந்த mRNA களில்  எந்த நோய்க்கு எதிர்ப்பு வேண்டுமோ அந்த நோய் கிருமியின் சாயலில் புரதம் (ஆன்டிஜென்) உண்டாக்குமாறு கோடான்  (CODONS) களை  டிசைன் செய்து உருவாக்குகிறார்கள்.இந்த ஒவ்வொரு mRNA களையும் உடல் அழித்து விடாமல் இருக்க தனித்தனியாக கொழுப்பு உறைகளில் சுற்றி வேக்சின்  தயாரிக்கிறார்கள் 
இந்த mRNA காலை மனித செல்களுக்குள் செலுத்திய உடன் மனித செல்கள் அவற்றை மொழிபெயர்த்து ஆன்டிஜென்களை உருவாக்குகிறது.
இந்த ஆன்டிஜென்கள் செல்லிலிருந்து எளியேறி போலி கிருமிகளை போல் பாவனை செய்து உடலின் எதிர்ப்பு அணுக்கள் வெளியாக துணை புரிகின்றன.(பார்க்க படம்-2)

கொரோனா வைரஸும்  வைரஸ் எதிர்ப்பான்களும்  

கொரோனா வைரஸ் மனித செல்களை எவ்வாறு ஆக்கிரமித்து அழிக்கிறது?
முதலில் ஒரு மனித செல் எப்படி இருக்கிறது என்பதை மேலோட்டமாக பார்க்கலாம் 
படம்-1
மேலே உள்ள படத்தில் கண்டபடி ஒரு செல்லின் உயிர்நாடி அதன் கருவுக்குள்தான் இருக்கிறது. கருவுக்குள் அடங்கி இருக்கும் குரோமோசோம்கள் உட்பட அனைத்து  சாதனங்களும் இருந்தால்தான் ஒரு செல் தனக்கு தேவையான புரதம் தயாரித்தல்,செல் பெருகுதல் போன்ற செயல்களை செய்யமுடியும். கரு தனக்குத்தேவையான புரத சத்துக்களை கருவுக்கு வெளியே இருக்கும் சைடோஸால் திரவத்தில் மிதந்து கொண்டிருக்கும் ரைபோசோம், tRNA க்கள் ,அமினோ அமிலங்கள் ஆகியவற்றைக்கொண்டு தயாரித்துக்கொள்ளும்.
கருவுக்குள் நடைபெறும் mRNA நகலெடுப்புகள்  (Transcriptions), கருவுக்கு வெளியே சைட்டோஸாலில் நடைபெறும் புரதம் தயாரிப்பு (Translations)  இரண்டு கட்டங்களும் ஒரு செல்வளர்ச்சிக்கு மிகமுக்கியமாகும் .
படம்-2

மேலே உள்ள கார்ட்டூன் படங்கள் கொரோனா போன்ற வைரஸ்கள் ஒரு மனித செல்லிற்குள் புகுந்து அதை எப்படி அழிக்கிறது என்பதை விவரிக்கிறது.
முதலில் கொரோனா போன்ற RNA வைரஸ்கள் செல்களுக்குள் சென்ற உடன் செல்லின் கரு இயந்திரத்தை முடக்குகிறது.(படம்-2-3). காரணம் RNA வைரஸ்களுக்கு பொதுவாக கரு இயந்திரங்கள் எதுவுமே தேவைப்படாது. இவற்றிடம் சொந்தமாகவே காப்பி எடுக்கும் RNA  சார்பு RNA பாலிமெரேஸ் (RdRP) என்ற நொதி (Enzyme) உண்டு.(படம்-2-3).
தன்னுடைய RdRP -களை  கொண்டு ஒரே நேரத்தில் பல mRNA களை காப்பிகளாக உருவாக்குகிறது.(படம்-2-3).
இந்த mRNA களை கொண்டு மனித செல் ரிபோசோம்களை பயன்படுத்தி மனித செல்களின் tRNA ,அமினோ அமிலங்களை கொண்டு தன் சொந்த புரதங்களை தயாரிக்கிறது.(படம் 2-4).
இந்த ஒவ்வொரு புரதங்களும் மனித செல்லின் சைடோஸால் திரவத்தில் வெற்று செல்களாக  மிதக்கும் வாக்கியுல்களுக்குள் (Vacuoles) புகுந்துகொண்டு தனித்தனி வைரஸ்களாக மாறி இறுதியில் முழு செல்லை உடைத்துக்கொண்டு வெளியேறுகிறது.(படம்-2-4).
வைரஸ் எதிர்ப்பான்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதை கார்ட்டூன் மூலம் விவரி 
படம் 1

மேலே படம் -1-ல் விவரிக்கப்பட்ட மருந்துளில் காமோஸ்டாட் மீசைலேட் எனும் ஜப்பானிய கண்டுபிடிப்பு ,வைரஸ் செல்களுக்குள் புக வழிப்பண்ணும் TMPRSS-2 என்ற நொதியை முடக்கிவிடுகிறது. இருப்பினும் இது இன்னும் பாதுகாப்பானது என நிரூபிக்கப்படவில்லை.இதுவே ஈசினோபிலியாவை உண்டாக்குகிறது என கண்டிருக்கிரார்கள். (படம்-1-1)
அடுத்ததாக மலேரியா மருந்துகளான ஹைடிராக்சி குளோரோகுயின்,மற்றும் குளோரோகுயின். இந்த இரண்டு மருந்துகளும் ACE2 ஏற்பிகளை முடக்கி வைரஸ் செல்களுக்குள் செல்லாமல் செய்கிறது. மேலும் அப்படியே மீறி உள்ளே செல்லும் வைரஸ்கள் தங்களுடைய மரபணுவை (Genome) வெளியேற விடாமல் செய்கிறது. நம் செல்களுக்குள் இருக்கும் கேதஸ்ப்பின் L (Cathespin L) என்ற நொதிதான் செல்களுக்குள் நுழையும் எந்த ஒரு புரதத்தையும் தோலுரித்து அதன் உட்பொருள் சைடோசாலில் வெளியாக உதவுகிறது. இந்த நொதியை முடக்கிவிட்டால் வைரஸ் தன்னுடைய மரபணுவை வெளியேற்ற முடியாமல் அழிந்துவிடும். ஆனால் ஹைடிராக்சி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயின் ஆய்வுகள் பரிசோதனைகளில் வெற்றி தந்தாலும் நடைமுறையில் எதிர்பார்த்த பலன் தரவில்லை.(படம்-1-2)
அடுத்து ட்ரிம்-22 என்ற ஜீன் வெளிப்பாடு செல்லின் கருவுக்குள் இருக்கிறது.இது இன்டெர்பிரான்-1 என்ற உடலின் நுண்ணுயிர் எதிர்ப்பான மூலம் உண்டாகிறது. இது கருவிலிருந்தோ அல்லது சைடோசாலில் வெளிப்பட்டோ உள்ளே நுழையும் வைரஸ்களை ப்ரோடியேசோம் என்ற நொதிக்கூட்டமைப்பின் மூலம் சிதைத்து விடுகிறது (படம்-1-3). ஆனால் கோவிட-19 விஷயத்தில் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை 
படம் -2


மேலே உள்ள படத்தில் சில வைரஸ் எதிர்ப்பான்கள் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமானது ரெம்டெசிவிர் என்ற வைரஸ் எதிர்ப்பான் ஆகும். ஏனென்றால் இதற்குத்தான் அமெரிக்க மருந்தியல் கூட்டமைப்பு (FDA) சில நிபந்தனைகளின் அடிப்படையில் தற்காலிக அவசர நிலை அங்கீகாரம் கொடுத்து இருக்கிறது.
ரெம்டெசிவிர் மனித செல்களுக்குள் புகுந்த கொரோனா வைரஸின் கரு அமிலமான RNA-வின் RdRP என்ற நகல் எடுக்கும் நொதியை (Transcription Enzyme) முடக்கி வைரஸ் பல்கி பெருகாமல் தடுக்கிறது.(படம்-2)
மேலே தரப்பட்டவை உட்பட எந்த மருந்தும் இன்று வரை கொரோனாவுக்கு (COVID -19) சரியான நிவாரணிகளாக இல்லை 
 
கொரோனா-பரீட்சார்த்த சிகிச்சை முயற்சிகள்:-
கேள்வி 1.சமீத்திய கோவிட் -19 சிகிச்சை முயற்சிகள் எத்தனை வகைப்படும்?
பதில் - இருவகைப்படும் 
கேள்வி 2. அவற்றை வகைப்படுத்து :-
பதில் -A . அறிகுறிகள் (SYMPTOMATIC TREATMENTS)சிகிச்சை -
இந்த சிகிச்சை வீக்க/அழற்சி  எதிர்ப்பான்களை (ANTI-INFLAMMATARIES) கொண்டு செய்யப்படுகிறது.
             -B .நோய் கிருமி எதிர்ப்பான்கள் (ANTIVIRAL TREATMENTS) சிகிச்சை -இது வைரஸ் எதிர்ப்பான்களை கொண்டு செய்யப்படுகிறது.
கேள்வி 3:அறிகுறிகள் சிகிச்சை என்று ஏன் கூறப்படுகிறது ?அதை மருந்துகளுடன் விவரி ?
பதில் -இந்த சிகிச்சையில் நோய் கிருமிகளை அழிப்பதற்கு பதில் நோய் அறிகுறிகள் எல்லை மீறும்போது வயதான மற்றும் பலஹீனமான நோயாளிகளை அதிலிருந்து மீட்பதற்கும் நோயின் தீவிரத்தை குறைத்து நோயாளிகளை தற்காலிகமாக ஆசுவாசப்படுத்துவதற்கும் இந்த சிகிச்சையை தருகிறார்கள்.இது இறுதியான சிகிச்சை அல்ல.இதில் தற்போது பெரும்பாலும் வீக்க எதிர்ப்பான்களை பயன்படுத்துகிறார்கள்.
அவை 
1.டெக்ஸ்சாமெத்தசோன் -DEXAMETHASONE -ஒரு கார்ட்டிகோ ஸ்டெராய்டு 
2.இண்டோமெதாசின் -INDOMETHACIN -ஒரு ஸ்டெராய்டு அல்லாத வீக்க எதிர்ப்பான்  
3.டோஸிலிஸுமேப் -Tocilizumab (Acterna) இது ஒரு உயிரி (biologics) வகையை சேர்ந்தது ஆகும் இது நோய் நேங்களில் நம் உடலில் சுரக்கும் இண்டர்லூக்கின் -6 (IL -6)என்ற சுரப்பின் ஏற்பியை IL -Receptor)மட்டுப்படுத்தி வீக்கத்தை கட்டுப்படுத்தும் தன்மை உடையதாகும்.IL-6 என்பது வீக்கத்தை உண்டாக்கும்  ஒரு சைடோக்கின் ஆகும்.இது நியூட்ரோபில் போன்ற வெள்ளையணுக்களில் இருந்து சுரக்கப்படுகிறது  
கேள்வி-4 டெக்ஸாமெத்தசோனும் இன்டோமெதாஸினும்  எவ்வாறு வேலை செய்கின்றன ?
இரண்டுமே உடலின் எதிர்ப்பு சக்தியை குறைத்து வீக்க சுரப்புகளை மட்டுப்படுத்துகின்றன.இவை மிக குறைந்த டோஸ் அளவே கொடுப்பதாக கூறுகிறார்கள்.உதாரணமாக பிரிட்டனில் ரிக்கவரி என்ற பரீட்சார்த்த சிகிச்சையில் தினசரி 6 மி கி வீதம் பத்து நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது 
கேள்வி-5: நுரையீரலின் வீக்க/அழற்சி  சுரப்புகள் யாவை?அவை எப்படி வருகின்றன?
பதில்:- நம் உடலில் சுவாசப்பகுதிதான் கிருமிகள் தொற்றுக்கு வசதியான மிக விஸ்தீரணமானதொரு பகுதியாகும்.
கிருமிகள் இந்த பகுதிக்குள் நுழைந்து விட்டால் உடனே அந்த பகுதிக்கு கீழ்கண்ட பாதுகாப்பு அமைப்புகள் படையெடுத்து வந்துவிடும்.
அவை, சைடோக்கீன்கள்,நியூட்ரோபில்ஸ்,மோனோசைட்டுகள் ,மேக்ரோபேஜ்கள் (வெள்ளை அணுக்கள்) இவற்றினால் வெளியாகும் பெஸோபிள்கள்(BASPOPHILS),ஈசினோபில்கள் ஹிஸ்டமினை வெளியாக்கும் மாஸ்ட் செல்கள் ஆகியவை.இவை நம்முடைய இயல்பான (INNATE) எதிர்ப்பு சக்திகள் ஆகும்.இது போக நோய் கூடியவுடன் இன்னும் சில விசேஷ எதிர்ப்பு அமைப்புகள் வெளியாகி இயல்பான எதிர்ப்பு சக்திக்கு இன்னும் வலுக்கூட்ட துவங்கும்.இவற்றிற்கு பெறப்பட்ட (Aquired) எதிர்ப்பு சக்தி என்று பெயர்.அவை ,
கிருமியின் தாக்குதலால் சுவாச மண்டல மேற்பரப்பில் வெளிக்கிளம்பி நிற்கும் B-செல்கள்,மற்றும் T-செல்கள்,கிருமி ஆன்டிஜென்களை லிம்போசைட்டுகளிடம் பிடித்து கொடுத்து அழிக்கும் சில விசேஷ செல்கள்.
B-செல்கள் இம்முனோகுளோபின் (IMMUNOGLOBINS அல்லது Ig)போன்ற ஆன்டிபாடிகளை உருவாக்கி செல்களுக்கு இடையே உள்ள கிருமிகளை அழித்துவிடும்.
T-செல்கள் B-செல்கள் Ig களை உருவாக்குவதை ஊக்குவிப்பதோடு செல்களுக்கு உள்ளே உள்ள கிருமிகளை Macrophage கள் மூலம் அழிப்பதற்கும் உதவுகிறது.
கேள்வி -6 சளியும் நிமோனியாவும் எவ்வாறு உண்டாகின்றன?
மேலே விவரிக்கப்பட்ட நம் உடலின் இரு எதிர்ப்பு சக்திகளையும் கிருமி தொற்று மிகைக்கும் போது சளி,மூச்சடைப்பு,கிருமித்தொற்றினால் ஏற்படும் ஆஸ்துமா நிமோனியா போன்ற பிரதிகூலங்களை நம் உடம்பு அடைய நேருகிறது.
மேலே கூறப்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்தி நோயாளியை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவதற்காகத்தான் இந்த வீக்க/அழற்சி  எதிர்ப்பு (ANTI-INFLAMMATORY) சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர் .
கேள்வி-7:- இந்த சிகிச்சையினால் ஏற்படும் தீமைகள் யாவை?
1.உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் -டெக்ஸாமெத்தசோன் 
2.வயிற்றில் அல்சர் உண்டாகலாம் -இன்டோமெதாஸின் 
3.சிறுநீரகம் பாதிக்கப்படலாம் 
4.உடலில் நீர்ச்சத்து தேங்கிவிடும் 
கேள்வி -8:வைரஸ் எதிர்ப்பான்கள் சிகிச்சை பற்றி விவரி?
பதில்:-இந்த சிகிச்சைக்காக கீழ் கண்ட மருந்துகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளனர்:-
1.lopinavir/ritonavir கூட்டு இந்த கூட்டு எய்ட்ஸ் நோய்க்காக கொடுக்கப்பட்டவை.இவற்றை பரீட்சார்த்த முறையில் UK யில் நடைமுறையில் இருக்கும் சுமார் 15,500 நோயாளிகளை மாதிரிகளாக ஈடுபடுத்தும் RECOVERY என்ற சிகிச்சை திட்டத்தில் பயன்படுத்தி உள்ளனர்.முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை 
2.remdesivir இது Glead Science என்ற அமெரிக்க கம்பெனியின் தயாரிப்பு ஆகும்.இதற்கு அமெரிக்காவின் FDA தற்காலிக அனுமதி கொடுத்திருக்கிறது.இதை தீவிர சிகிசிச்சையிலுள்ள நோயாளிகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கிறார்கள்.ஆஸ்பத்திரியில் தங்கி இருக்கும் நாட்களை இது 30 சதவீதம் குறைந்திருப்பதாக கூறுகிறார்கள்.இது எபோலா நோய்க்கு கண்டுபிடிக்கப்பட்டது எனினும் அதில் அவ்வளவு பலன் கொடுக்கவில்லை.இதிலும் எதிர்பார்த்த பலன் கொடுக்கவில்லை என்றாலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறார்கள்.
3.Favipiravir இது ஜப்பானின் போட்டோ பிலிம் தயாரிப்பு கம்பெனியான பியூஜி பிலிம் கூட்டு கம்பெனியான Toyama Chemical கம்பெனியின் தயாரிப்பு ஆகும் .இது 2014 இல் ஜப்பானில் பரவிய புதியவகை இன்ப்ளூயன்சா வைரஸிற்காக அனுமதிக்கப்பட்டது.சீனா இதை அங்கீகரித்துள்ளது.இந்தியா இத்தாலி உட்பட 34 நாடுகளில் இது பரிசோதனையில் இருக்கிறது.
பொதுவாகவே வைரஸ் எதிர்ப்பான்கள் எவ்வாறு வேலை செய்கின்றன ?
1.வைரஸ்களின் பிரதி எடுக்கும் பாலிமெரேஸ் புரதங்களை சிதைப்பது.
2.வைரஸ் RNA வை சிதைப்பது 
3.வைரஸ் ஸ்பைக் (S-Protein) புரதங்களை சிதைப்பது.
4.ஏற்பிகளை அடைப்பது (Receptorblockers)

இன்டெர்ப்பிரான் வைரஸ் எதிர்ப்பான்கள் :

(ANTIIRAL ACTIVITIES OF INTERFERONS)
கேள்வி-9:இன்டெர்பிரான்கள் என்பவை யாவை ?
இன்டெர்பிரான் என்பது நோய் தொற்றின் போது நம் உடலின் வெள்ளை அணுக்கள் போன்ற நோய் எதிர்ப்பு செல்களில் இருந்து வெளிப்படும் ஒரு வைரஸ் எதிர்ப்பு புரதமாகும்.
கேள்வி-10:இன்டெர்பிரான் எவ்வாறு இயங்குகிறது ?
இன்டெர்பிரான்கள் வைரஸின் புரதங்களை சிதைத்து அது பெருக விடாமல் தடுக்கின்றன.
கேள்வி-11:இன்டெர்பிரான்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று வகைப்படும்.
கேள்வி-12 அவை யாவை?
1.ஆல்பா IFN ;  2.பீட்டா IFN ;   3.காமா IFN 
கேள்வி-13:அவற்றை விவரி?
ஆல்பா IFN  மற்றும் பீட்டா IFN இவை இரண்டும் சேர்ந்து IFN -1 என்பர்.
IFN வெள்ளை அணுக்களிலிருந்து வெளியாகிறது 
காமா IFN  இது IFN -2 ஆகும்.இது T -செல்களிலிருந்து வெளியாகிறது .
கேள்வி -14:T-செல்கள் யாவை?
நமது வெள்ளை அணுக்களில் லிம்போசைட்டுகள்(LYMPHOCYTES) என்ற ஒரு வகை செல்கள் உண்டு.
இவை  இருவகைபடும்.
T-லிம்போசைட்டுகள் (T-செல்கள்)
B -லிம்போசைட்டுகள் (B -செல்கள்) 
கேள்வி-15:கோவிட் -19 வைரஸ்களை எதிர்க்க எந்த வகை இன்டெர்பிரான்கள் சிபாரிசு செய்யப்பட்டன?
1.IFN ஆல்பா.
2.IFN பீட்டா 
சீனாவில் வூஹானில் கனடாவை சேர்ந்த டாக்டர் Eleanor Fish இந்த தலைமையில் ஒரு ஆய்வு குழு 77 நோயாளிகளுக்கு   (16 Jan 2020 -20 - Feb 2020) IFN ஆல்பா 2b ஐயை 5 மில்லி யூனிட் நெபுலைசர் மூலமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுத்தனர் 
அதே போல் சில நோயாளிகளுக்கு IFN ஆல்பா 2b யுடன் யுமிபினோவிர் (Umifenovir) என்ற வைரஸ் எதிர்ப்பானையும் சேர்த்து கொடுத்தனர். umifinovir ஐ ஒரு மாத்திரை காலை மாலை இரவு என்ற மூன்று வேளை வீதத்தில் கொடுத்தனர்.இரண்டு சிகிச்சை முறையிலுமே நல்ல வெற்றி கிடைத்தாலும் இந்த சிகிச்சை முறைகள் உலகின் மற்ற பாகங்களில் தொடரவில்லை.
இதில் வேடிக்கை என்ன வென்றால் Umifinovir தனியாக கொடுத்துப்பார்த்த சிகிச்சையில் பலன் இல்லை.
ஆனால் INF-ஆல்பா 2b ஐ தனியாக கொடுத்து பார்த்த சிகிச்சையிலும் சீனாவில் மிகப்பெரும் வெற்றி கிடைத்திருக்கிறது.அதாவது ஏழு நாட்களுக்குள் ஏறத்தாழ 80% வைரசை வெளியேற்றி இருக்கிறது.அதோடு இது வெறும் இன்ஹேலர் அல்லது நெபுலைசர் மூலமாக கொடுக்க ஏதுவானது.
கேள்வி-16: உலக சுகாதார நிறுவனத்தின் SOLIDARITY TRIAL இல் என்னென்ன மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன?
1.Remdesivir -ரெம்டெசிவிர் -எபோலா 
2.Lopinavir /Ritonavir -லோபினாவிர்/ரிடோனாவிர் -எய்ட்ஸ் 
3.Lopinavir/Ritonavir/IFN beta 1a-லோபினாவிர்/ரிட்டோனாவிர்/INF பீட்டா 1a
கேள்வி-17: ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழத்தின் RECOVERY TRIAL இல் என்னென்ன மருந்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன?
1.Lopinavir/Ritonavir 
2.Azithromycin 
3.Tocilizumab 
4.Dexamethasone 
5.Convalescent Plasma 
இதில் எதிலுமே INF ஆல்பா 1b சேர்க்கப்படவில்லை.
எனினும் இன்று வரை கோவிட் -19 சரியான ஒரு சிகிச்சை  வெளி வரவில்லை 





கொரோனா -கேள்வி பதில்கள் :-

கொரோனா வைரசை வகைப்படுத்து :-
பகுதி     (Realm)                          ...  ரிபோவிரியா (Riboviria)
ஒழுங்கு  (Order )                       ...  நிடோவிரேல்ஸ்
                                                             (Nidovirales)
குடும்பம் (Family)                      ...  கொரோனாவிரிடே                                                                      (Coronaviridae)
துணை குடும்பம் (Sub-family) ...        ஆர்தோகொரோனவிரிடே   (Orthocoronaviridae )
  கொரோனவிரிடே குடும்பத்தின் நான்கு துணை பிரிவுகள் யாவை ?
1.ஆல்பாகோரோனாவிரிடே  
2.பீட்டாகொரோனாவிரிடே 
3.காமாகொரோனாவிரிடே 
4.டெல்ட்டாகொரோனாவிரிடே 
மேலே கண்ட நான்கு பிரிவுகளிலும் முதல் இரண்டு பிரிவை சேர்ந்த வைரஸ்கள் மட்டுமே மனிதர்களை தாக்கக்கூடியவை என்று இதுவரை உள்ள ஆய்வுகள் கூறுகின்றன.
மனிதர்களை தாக்கும் அந்த வைரஸ்கள் யாவை?
1.HCoV -NL 63         ஆல்பா வகை                   சாதாரணம் 
2.HCoV -229 E           ஆல்பா வகை                  சாதாரணம் 
3.HCoV -OC 43         பீட்டா வகை                     சாதாரணம் 
4.HCoV -HKU 1        பீட்டா வகை                     சாதாரணம் 
5.HCoV -HKU 4        பீட்டா வகை                     கடுமை 
6.HCoV -MERS         பீட்டா வகை                     கடுமை 
7.HCoV -SARS         பீட்டா வகை                      கடுமை 
8.HCoV -SARS -2     பீட்டா வகை                     மிக கடுமை 
மேலே வகைப்படுத்தப்பட்டகொரோனாவைரஸ்கள் 
நம் உடல் செல்களை எந்தெந்த ஏற்பிகள் மூலம் தாக்குகின்றன?
HCoV -NL63    -சியாலிக் அமிலம்   -மேல் சுவாச பகுதி
HCoV -229E     -               ,,                                       ,,
HCoV -OC43    -               ,,                                       ,,
HCoV -HKU1   -               ,,                                       ,, 
HCoV -HKU4   -           DPP 4                 - கீழ்        ,,
HCoV -MERS -            DPP 4                 - கீழ்        ,,  
HCoV -SARS  -           ACE 2                 - கீழ்         ,,
HCoV -SARS2 -          ACE 2                 -கீழ்         ,,
DPP 4 என்றால் என்ன?அது வேறு எந்தெந்த பகுதிகளில் இருக்கிறது?
டை பெப்டிடைல் பெப்டிடேஸ் 4(DIPEPTIDYL PEPTIDASE 4)
இது அதிகமாக நுரையீரல்,ஜீரண மண்டலம்,இதய மற்றும் இரத்த நாள உட்சுவர் திசுக்கள் ஆகியவற்றிலும் சிறுநீரக பகுதியிலும் அடர்த்தியாக உள்ளது.
DPP4 ன் மற்ற விளைவுகள் என்ன ?
நம் இரத்தத்தில் க்ளுகோஸ் அளவு குறைந்து விடாமல் பாதுகாக்கிறது.
இது incretins என்ற வகை ஹார்மோன்களை சிதைத்து இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.
கொரோனா வைரஸ்களில் மிக பழமையான இரண்டு வைரஸ்களை யாவை?அவை தொற்றும்போது வேறு எந்த இரண்டு வைரஸ்களுக்கும் சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது?
1960 களின் மத்தியில் முதல் கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்டது.குழந்தைகளுக்கு இலேசான ஜலதோஷம் உண்டாக்கிய அந்த தொற்று HCoV-OC 43 மற்றும் HCoV -229E என்ற வைரஸ்களினால் ஏற்பட்டதாகும்.
அந்த தொற்று நோய் குணமாகிய பின் அந்த குழந்தைகளின் இரத்தத்தில் அவற்றுடன் சேர்த்து HCoV-NL 63 மற்றும் HCoV-HKU1 வைரஸ்களுக்கும் சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகியது தெரியவந்தது.
புதிய கொரோனா வைரஸின்  பெயர்கள் யாவை?
1.HCoV-SARS-2 
2.HnCoV-2019
இந்த புதிய கொரோனாவின் அளவுகள் என்ன?
விட்டம்       120-500 NMS 
RNA நீளம்   30-32 kbs  (kilobase)   (1 kb =1000 nucleotides)
S -spikes         74 approx (spikes -குச்சிகள்)
புதிய கொரோனவைரஸால் உண்டாக்கப்படும் நோயின் பெயர் என்ன?
கோவிட் -19
கோவிட் -19 நோயின் அறிகுறிகள் யாவை?
1.ஜலதோஷத்தில் தொடங்கி வறட்டு இருமல் ,சளி,மூச்சுக்குழாய் அழற்சி,எரிவு,வீக்கம் என்று தொடர்ந்து இறுதியில் நிமோனியா.
2.காய்ச்சல் 
3.நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் போது தலைவலி,நுகரும் சக்தி குறைவு,பார்வை கோளாறு 
4.இரத்த அழுத்தம் உயர்வதால் இதய கோளாறுகள் 
5.கணையம் பாதிக்கப்படுவதால் நீரிழிவு கடுமையாதல் 
6.ஜீரண மண்டலம் பாதிக்கப்படுவதால் வயிற்றுப்போக்கு.
இந்த நோய் குழந்தைகளையும் இளம் பெண்களையும் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களையும் கடுமையாக தாக்குவதில்லை.
இந்த நோய் நம் உடலில் எந்தெந்த பகுதிகளை எல்லாம் தாக்குகிறது?
எந்தெந்த பகுதிகளிலெல்லாம் ACE-2 என்ற ஏற்பி இருக்கிறதோ அந்த பகுதிகளையெல்லாம் தாக்கும் 
அந்த பகுதிகள் யாவை?
1.சுவாச மண்டலம் 
2.இதயம் மற்றும் இரத்த ஓட்ட மண்டலம் 
3.சிறுநீரகம் ,கல்லீரல்,கணையம் உட்பட ஜீரண     மண்டலம் 
4.மூளை உட்பட நரம்பு மண்டலம்
ACE 2 என்றால் என்ன?அதன் தன்மைகள் என்ன?
Angiotensin-Converting Enzyme-2 
இரத்த அழுத்தம் உயராமல் பார்த்து கொள்வது 
இரத்த நாளங்களை விரிவடைய செய்து இரத்த ஓட்டத்தை சீராக்குவது 
சுவாச மண்டலத்தில் அழற்சி, வீக்கம், சளி, அடைப்பு, நிமோனியா உண்டாகாமல் பாதுகாப்பது 
ACE 2 எத்தனை வகைப்படும்?அவை யாவை?
1.திசுக்களின் செல்களின் மேல் ஒட்டிக்கொண்டு ஏற்பிகளாக பயன்படும் ACE 2
2.உடலின் திரவங்களில் கரைந்த நிலையில் என்ஜைம்களாக மட்டுமே பயன்படும் ACE 2.
இந்த ACE 2 என்ஜைமக்களை வைரஸ் தாக்கும் பொழுது நோய்களை ஏற்படுத்தாது.
கோவிட் -19 பெண்களை விட ஆண்களை அதிகமாக பாதிக்க  காரணங்கள் என்ன ?
1.ஆண்களின் உடலில் அதிகமான ACE 2 ஏற்பிகள் உள்ளன 
2.இளம் பருவமடைந்த பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் பாதுகாப்பு இருக்கிறது.



                     
பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன்கள் பாதுகாப்பா?
ஆம் என்றுதான் மருத்துவம் சொல்கிறது.மாதவிடாய் சரியாக வரும் பெண்களுக்கு (18 -- 45 வயது) வைரஸ் தொற்றின் போது ஏற்படும் சளி நிமோனியா ஆஸ்த்துமா இதய இரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் ஆகியவற்றிலிருந்து அவர்களின் சினைகளிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜன்கள் எனப்படும் பெண் இயக்கு நீர்கள் பாதுகாப்பு கொடுக்கின்றன என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு அல்லது சினைகள் அகற்றப்பட்ட பெண்களுக்கு இந்த பாதுகாப்பு இல்லை 
கொரோனா வைரஸ் மருத்துவத்தில் ACE 2 ஏற்பியை எவ்வாறு பயன்படுத்தலாம்?
இதை பற்றி அறிவதற்கு முன் ACE 2 ஏற்பி நம் உடலில் எங்கெல்லாம் பரவி இருக்கிறது,அதன் இயல்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.
ACE 2 ஏற்பிகள்.நம் உடலில் பல பகுதிகளிலும் பரவி இருக்கிறது.முக்கியமாக சுவாச மண்டலம், சிறுநீரக மண்டலம், இதய மற்றும் இரத்த ஓட்ட மண்டலம், ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம் என பல இடங்களிலும் பரந்து இருக்கிறது. இவை ACE 1 ஏற்பிகளை போல் இல்லாமல் அதற்கு எதிரிடையான நிலை கொண்டிருக்கிறது.
உதாரணமாக ACE 1 ஏற்பி ஆன்ஜியோடென்ஸின் -I  ஐ ஆன்ஜியோடென்ஸின்-II ஆக மாற்றி இரத்த அழுத்தத்தை உயர்த்தும்.
ஆனால் ACE -2 ஏற்பி ஆன்ஜியோடென்ஸின்-I ஐ ஆன்ஜியோடென்ஸின் 1-9 ஆக மாற்றி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.அதே போல் ஆன்ஜியோடென்ஸின்-II ஐ ஆஞ்சியோடென்ஸின் 1-7 ஆக மாற்றி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது 
மேலும்  வீக்கமுண்டாக்கும் சுரப்புகளையும் தடுத்து ஆஸ்துமா, நிமோனியா,சளி மற்றும் இதய மற்றும் இரத்த குழாய் நோய்கள் ஸ்ட்ரோக் ஆகியவை  ஏற்படாமல் பாதுகாக்கிறது.
ஆனால் கோவிட் 19 நோயின் போது  இந்த வைரஸ்  ACE 2 ஏற்பியைத்தான் அதிகமாக தாக்குகிறது.
மேலும் இந்த ACE 2 ஏற்பி நம் உடலில் இருவகைகளாக இருக்கிறது.ஒன்று திசுக்களின் செல்களில் ஏற்பிகளாக ஒட்டி இருப்பது.
இன்னொன்று இரத்தம் நிணநீர் போன்ற உடல் நீர்களில் கரைந்த நிலையில் ஓடிக்கொண்டிருப்பது.இப்படி செல்களில் ஏற்பியாக இல்லாமல் கரைபொருளாக இருக்கும் ACE 2 வுக்கும்  வைரஸை ஈர்க்கக்கூடிய சக்தி உண்டு.ஆனால் இதை வைரஸ் தாக்குவதால் செல்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை 
எனவே விஞ்ஞானிகள் இந்த ACE 2 கரைசலை ஊசி மூலம் செலுத்தி வைரஸை செல் ஏற்பியாக இருக்கும் ACE 2 வை தாக்காமல் திசை திருப்ப முடியுமா என்ற ஒரு ஆய்வில் உள்ளனர்.ஆனால் இதிலும் ஒரு பிரசினை உள்ளது.கரை பொருள் ACE 2 வை உடலுக்குள் செலுத்தும் போது இரத்த அழுத்த சீர்குலைவு உண்டாகலாம் .செலுத்தப்படும் கரைபொருள் ACE 2 கரைந்த  நிலையில் நிலைக்கமால் திசுக்களின் மீது மீண்டும் ஏற்பிகளாக  ஒட்டிக்கொள்ளும் போது வைரஸின் தாக்கம் கடுமையாகி விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.எனவே ACE 2 சிகிச்சையில் இன்னும் ஒரு முடிவு எட்டவில்லை 
ACE 1 முடக்கிகள் (ACEI)  மற்றும் ஆஞ்சியோடென்ஸின் -II ஏற்பி-1அடைப்பான்கள் (ARB)இவற்றை தங்களுடைய உயர் இரத்த அழுத்த நோய்க்காக டாக்டர் சீட்டின் படி சாப்பிடுபவர்களின் நிலைப்பாடு கொரோன தொற்றுக்கு பிறகு எப்படி?
ACE -1 முடக்கிகள் (Captopril,Enalapril போன்ற --pril மருந்துகள்)
ARB (Telmisartan,Olmisartan போன்ற --sartan மருந்துகள்)
உண்பவர்கள் வழமைபோல் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அவற்றை நிறுத்த கூடாது.
கோட்பாடு அளவில் இவை நன்மை பயக்கலாம் என்றாலும் நடைமுறையில் அவை நிரூபிக்கப்படவில்லை.
கொரோனாவிற்கான மருத்துவ சிகிச்சையின் தற்போதைய முன்னேற்றங்கள் யாவை?
1.கடந்த மே 01-05-20 அன்று அமெரிக்காவின் கிளியாட் மருந்து கம்பெனியின் தயாரிப்பான ரெம்டெசிவிர் என்ற மருந்திற்கு அமெரிக்க உணவு & மருந்து நிர்வாகம் (F.D.A)தற்காலிக பயன்பாட்டு அனுமதி அளித்திருக்கிறது.இந்த அனுமதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டுள்ள மிக ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே பொருந்தும் 

4-அமினோ குயினோலின்களும் -கோவிட் -19 சிகிச்சையும் 

4-அமினோ குயினோலின்கள் என்றால் என்ன ?அவை யாவை ?
இவை நுண்ணுயிர் எதிர்வேதிகளில் ஒரு வகை வேதிகளாகும்.இவற்றின் வேதி உரு அமைப்பில் கீழ் கண்டவாறு அமைந்து இருக்கின்றன 
அந்த நீல வளையத்திற்குள் இருப்பதுதான் குயினோலின் அமைப்பு 
4-என்ற எண் 4-ஆவது கார்பன் அணுவை குறிக்கும் அதனுடன் ஒட்டி இருப்பதுதான் NH-என்ற அமினோ அமைப்பு ஆகும் எனவே இவை இரண்டும் 4-அமினோகுயினோலின் வகையை சேர்ந்த ஆண்டிபையாட்டிக்குகள் ஆகும் 
மேலே உள்ள இரண்டு ஆண்டிபையாட்டிக்குகளிலும் பொதுவாக இருப்பது அந்த நீல வளையத்திற்குள் இருக்கும் அந்த குயினோலின் அமைப்பு ஆகும் இந்த அமைப்புதான் இந்த வேதி பொருட்களின் ஆண்டிபையாட்டிக் குணத்திற்கு அடிப்படை ஆகும் 
இந்த 4-அமினோகுயினோலின்கள் பல இருந்தாலும் இப்போது மேலே குறிப்பிடப்பட்ட அந்த இரண்டு ஆண்டிபையாட்டிக்குகள் மட்டும்தான் இப்போது கோவிட் -19 சம்பந்தமாக பிரஸ்தாபிக்க படுகின்றன 
இவற்றின் வைரஸ் எதிர்ப்புத்தன்மையை விவரி ?
குளோரோகுயின் முதன்முதலில் 1960 இல் மோனோநியூக்ளியோசிஸ் என்ற நோயை உண்டாக்கும் H4N1 அல்லது Epstein-Barr என்ற வைரசை எதிர்த்து ஆய்வு கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது.அப்போது அது வைரஸின் வீரியத்தை அதிகரித்ததைதான் காண முடிந்தது 
அடுத்து இது ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட சுண்டெலிகளிடமிருந்து அதன் சந்ததிகளுக்கு பரவாமல் தடுப்பதை கண்டறிந்தனர் 
குளோரோகுயின் ஆய்வு கூடத்தில் எபோலா வைரஸின் பெருகுதலையும் வீரியத்தையும் கட்டுப்படுத்தினாலும் எபோலாவால் பாதிக்கப்பட்ட சீமை பன்றிகளுக்கு (guinea pigs) கொடுத்ததில் அது நோயை அதிகரித்ததையும் கண்டனர் 
அதே போல் ஆய்வு கூடத்தில் சிக்குன்குனியா வைரஸின் பெருக்கத்தை குறைத்த குளோரோகுயின் அந்த நோயால் பாதிக்கப்பட்ட குரங்குகளுக்கு கொடுக்கப்பட்டதில் அது  நோயை அதிகரிப்பதைத்தான் கண்டனர்.
அதேபோல் டெங்கு வைரஸ்களை ஆய்வு கூடத்தில் கட்டுப்படுத்தும் குளோரோகுயின் அந்த நோயினால் பாதிக்கப்பட்ட 37 நோயாளிகளுக்கு கொடுத்ததில் நோய் நிவாரணம் தரவில்லை 
இன்ப்ளூயன்சா வைரஸ் விஷயத்திலும் ஆய்க்குகூடத்தில் வைரஸை கட்டுப்படுத்தினாலும் நோயாளிகளுக்கு குணம் தரவில்லை 
எனவே கோவிட் -19 விஷயத்திலும் விஞ்ஞானிகளால் இந்த 4 -அமினோகுயினோலின் பற்றி எந்த முடிவும் எடுக்க முடியவில்லை 
இந்த மருந்து ஏன் ஆய்வு கூடத்தில் ஒரு மாதிரியாகவும் உடலுக்குள் ஒரு மாதிரியாகவும் செயல்படுகிறது ?
ஒரு ஊகம்தான்.அதாவது இந்த மருந்தை உடல் எதிர்கொள்ளும் தன்மை அல்லது இந்த மருந்தை உடல் அதன் நுழைவு நிலையிலிருந்து (stage of administration) கழிவு நிலைக்கு(stage of  excretion)  கொண்டுபோகும் தன்மை குழப்பம் மிக்கதாக இருக்கிறது.இதை மருத்துவ மொழியில் complex pharmacokinetics of chloroquine என்பர். 
சீனர்கள் இதை வெற்றிகரமாக கையாளுகிறார்களாமே ?
அதில் ஒரே குழப்பம்.உதாரணமாக சீன குறிப்புகளில் 15 பரிசோதனைகளை குறிப்பிடுகிறார்கள்.மொத்தம் 100 நோயாளிகளை இப்பரிசோதனைகளுக்கு உட்படுத்தி பயிற்சிகள் மேற்கொண்டதில் குளோரோகுயினின் பாஸ்பேட் உப்பு நிமோனியாவின் வீரியத்தை கட்டுப்படுத்துவதில் சல்பேட் உப்பைவிட முதல் நிலை வகிப்பதாக குறிப்புகள் உள்ளன.இதில் தெளிவு இல்லை 
மேலும் இப்பரிசோதனைகளில் ஒன்றில் சீரற்ற முறையில் (Randomised)  62 நோயாளிகளை தெரிந்தெடுத்து அவர்களை 31 நபர்கள் கொண்ட இரு பிரிவுகளாக்கி  ஒரு பிரிவுக்கு உயர்ந்த அளவு  ஹைட்ராக்சிகுளோரோகுயினும்  மற்ற பிரிவுக்கு குறைந்த டோஸ் ஹைட்ராக்சிகுளோரோகுயினும் கொடுத்து பரிசோதித்ததில் முதல் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நிமோனியாவின் வீரியம் இலேசாக குறைந்து இருந்ததாக ஒரு பூர்வாங்க அறிக்கையை தருகின்றனர்.
ஆனால் இந்த குறிப்புகள் பரிசோதனை ரிப்போர்டுகளில் பதியப்படவில்லை.அதோடு குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்ட மற்றப்பிரிவினரின் நிலையும் தெளிவுபடுத்தப்படவில்லை.பரிசோதனை ரிகார்டுகளிலும் இல்லை.இறுதியாக இப்பரிசோதனைகள் இடையிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்கள்  
அதே போல் இன்னொரு பரிசோதனை 20 நோயாளிகளை வைத்து நடத்தப்பட்டது .அதுவும் தெளிவானதாக இல்லை.
பிரான்சில் குளோரோகுய்ன் ஏற்றுமதியை அந்த அரசு தடைசெய்துள்ளதாமே அப்படியானால் இந்த மருந்து அங்கு வெற்றிகரமாக நோயை குணப்படுத்துகிறதா?
ஏற்றுமதி தடை செய்யப்பட்டு இருப்பது உண்மைதான் .ஆனால் சிகிச்சையில் வெற்றி என்பது உண்மை இல்லை .அங்கு நடந்த குழப்பம் இதுதான் 
அந்த நாட்டின் அதிபர்  இம்மானுவேல் மெக்ரான் .இவர் திடீரென்று தெற்கு பிரான்சில் இருக்கும் நுண்ணுயிரியல் ஆய்வுகூடத்தின்  அதிபரான Dr .டைடியர் ரவுல்ட் என்பவரை அவரது ஆய்வு கூடத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பில் மீடியாக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.இந்த டாக்டர் டைடியார் ரவுல்ட் ஒரு நுண்ணுயிர் ஆய்வாளராக இருந்தாலும் அதிகாரபூர்வமான எந்த ஒரு மருத்துவ குழுவிலோ அல்லது அமைப்புகளிலோ தன்னை இணைத்துக்கொண்டவர் இல்லை.ஆனால் பிரஞ்சு அரசியல் மற்றும் அரசாங்க அளவில் மிக ஆதரவுள்ளவர்.உறுதியான உயர் மட்ட தொடர்பு உடையவர்.
இவர்தான் அதிபரிடம் கோவிட் -19 க்கு 
ஹைட்ராக்சிகுளோரோகுயினும் அஜித்ரோமைசின் இணைந்த சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக செயல்படுகிறதென்றும் தன்  ஆய்வு கூட்டத்திலேயே 100 பேருக்கு இதன் மூலம் குணப்படுத்தி இருப்பதாகவும் கூறுகின்றார்.
அரசியல் மட்டத்தில் இவருக்கு ஆதரவு இருந்தாலும் அங்குள்ள தலை சிறந்த மருத்துவ விஞ்ஞானிகள் இவரது கூற்றை ஏற்க மறுக்கின்றனர் 
இதுதான் அமெரிக்க அதிபர் டிரம்பும் நம் பிரதமர் மோடியும் இந்த மருந்துகளை தூக்கி பிடித்துக்கொண்டு இருப்பதன் காரணம் 
இப்போது இதன் முடிவுதான் என்ன ?
4-அமினோகுயினோலின் வகை மருந்துகள் திருப்திகரமான முடிவுகளை இதுவரை தரவில்லை 
சீனாவும் வெளிப்படையான தகவல்களை தரவில்லை 
கியூபாவின் inteferon -α 2b என்ற மருந்து  சிகிச்சைக்கு மிக நெருக்கமாக இருந்தாலும் குணம் தருவதில் பலவீனமானதாகவும் பக்கவிளைவுகள் ஏற்படுத்துவதில் மிகவும் கடுமையானதாகவும் இருக்கிறது.
வைரஸ் எதிர்ப்பான் (Antivirals) மருந்தான Remdesivir  மற்றும் இது போன்ற மற்ற வைரஸ் எதிர்ப்பான்களும்  இன்னமும் ஆய்வு அளவு முயற்சியில்தான் இருக்கின்றன என்பதுதான் துரதிர்ஷ்டம் .
ஏன் இந்த துரதிர்ஷ்டம்.ஏன் இந்த வைரஸ் மற்ற வைரஸ்களை போல எதற்குமே கட்டுப்பட மறுக்கிறது ?
இதனுடைய அமைப்புதான் காரணம் இதன் மொத்த உருவ அமைப்பு  90 நானோ மீட்டர்களாகும்.ஒரு மீட்டரில் ஒரு பில்லியனில் ஒரு பங்கு ,ஒரு மில்லி மீட்டரில் ஒரு மில்லியனில் ஒரு பங்கு அல்லது ஒரு மைக்ரானில் ஆயிரத்தில் ஒரு பங்கு.
இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு நுண்ணுயிரியை விஞ்ஞான உலகமே இதுவரை கண்டதில்லை. திகைத்து நிற்கிறது .இந்த வைரஸின் RNA இல் சுமார் 30000 இராசயன எழுத்துக்கள் nucleotides என்ற வடிவத்தில் ஒரு கேப்சிட் என்ற வளையத்திற்குள் பொதிந்து வைக்கப்பட்டு இருக்கின்றன.
முற்றிய நிலையில் மருத்துவம் இல்லை எனினும் 
ஆரம்ப கட்டத்தில் சாதாரண தும்மல் காய்ச்சல் நிலையில் இருக்கும்போதே குளோரோகுயின் போன்ற ஆன்டிபயாட்டிக்குகளை எடுத்துக்கொண்டு மீண்டவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அதற்கு உங்கள் உடல் ஆரோக்கியம், வயது, நோய் எதிர்ப்புசக்தி ஆகியவை ஒத்துழைக்கவேண்டும் 
ஆவி பிடித்தல் நல்லதா?
ஆம் ஆவி பிடித்தல் பொதுவாகவே மிகவும் நல்லதாகும் 
வெறும் வெந்நீரில் ஆவி  பிடிக்கலாம் 
அல்லது அத்துடன் ஒரு கரண்டி இடித்த சுக்குத்தூள்,இரண்டு நல்ல மிளகு,நாலைந்து புதினா இலைகள் ஒரு சிறு தேக்கரண்டி மஞ்சள் தூள்,ஒரு சிறு நசுக்கிய அதிமதுர பட்டை இவற்றை போட்டு தினசரி ஆவி  பிடித்தால் நுரையீரல் சம்பந்தமான எந்த நோயும் அணுகாது 


கொரோனா வைரஸ் (COVD-19)

இப்போது சைனாவை மட்டுமல்ல உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த புதிய வைரஸிற்கு COVID -19-கோவிட் -19 என்று பெயர் வைத்திருக்கிறார்கள் .இதன் அமைப்பைத்தான் மேலே பார்க்கிறீர்கள்.
பொதுவாக கொரோனா வைரஸ்களில் சில ஆபத்தில்லாதவை அவை 229E CoV ,மற்றும் OC 43-CoV  போன்றவை .இவை மனிதர்களுக்கு சாதாரண ஜலதோஷம் இருமல் இவற்றை உண்டாக்குபவை.வைட்டமின் சி அடங்கிய சிட்ரஸ் பழவகைகள் அல்லது வைட்டமின் சி மாத்திரை இவற்றை இதற்கு நிவாரணிகளாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது எந்த சிகிச்சையுமே இல்லாமல் இவை பத்து பதினைந்து நாட்களுக்குள் தானே சுகமாகிவிடும்.அது மட்டுமல்லாது இவற்றின் தொற்று மனிதனுக்கு வைரஸ் நோய் தடுப்பாற்றலையும் அதிகரிக்கச்செய்யும் 
பொதுவாக வைரஸ்கள் அதிகம் குச்சு குச்சியாக நீண்டு இருக்கும் ஆனால் கொரோனா வைரஸ்களின் அமைப்பு ரோட்டா வைரசைபோல் உருண்டையாக இருக்கும் அதன் மேல்பகுதியில் படம்-1 இல் கண்டதைப்போல் முட்கள் போல் மகுடத்தை அலங்கரிப்போதுபோல் அமைந்து இருப்பவை.இது கிரீடம் போல் காட்சியளிப்பதால் இதன் பெயர் கொரோனா ஆகும் 
இந்த வகை வைரஸ்களில் மனிதர்களை பாதிக்க கூடிய வகை பெரும்பாலும் பீட்டா கொரோனா வைரஸ் வகையை சேர்ந்ததாகும் 
பொதுவாக கொரோனாவை கொரோனவிரிடே என்ற குடும்பத்தின் கீழ் நான்கு உட்பிரிவுகளாக (ஜீன்களாக) பிரிக்கலாம்.அவை  ஆல்பா ,பீட்டா காமா டெல்டா வைரஸ்கள் என்பனவாகும் 
ஏற்கனவே சீனாவில் 2002 ஆம் ஆண்டு இதுபோல ஒரு வைரஸ் தொற்று ஏற்பட்டு சுமார் 800 பேர் வரை பழிவாங்கியது.கடுமையான சுவாச கோளாறு சளி இருமல் காய்ச்சல் என்று பல அறிகுறிகளை கொண்ட இந்த வைரஸிற்கு சார்ஸ் கொரோன (SARS CoV)வைரஸ் என்று பெயர் .அதாவது கடுமையான குறுகிய கால மூச்சு கோளாறு அல்லது மருத்துவ மொழியில் SEVERE ACUTE RESPIRATORY SYNDROME.இதன் சுருக்கமே SARS ஆகும்.
இதே போல் 2012 இல் சவுதி அரேபியாவில் இது போன்று வைரஸ் தொற்று பரவி சுமார் ஆயிரம் உயிர்களை பழிவாங்கியது அது ஒட்டகத்திலிருந்து பரவியதால் அதை ஒட்டக ஜுரம் என்று அவர்கள் அழைத்தனர்.ஆனால் மருத்துவ துறை அதற்கு மத்திய கிழக்கு வைரஸ் (MIDDLE EAST RESPIRATORY SYNDROME VIRUS-MERS-CoV)என்று அழைத்தது.எனினும் SARS உம் ,MERS உம் இப்பொது உலகத்தையே பயமுறுத்தி கொண்டிருக்கும் COVID -19 உம் எல்லாமே குதிரை காலணி வெளவால் (HORSE SHOE BAT) என்ற வகை வெளவால் மூலமாகவே பரவி இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் 
MERS வைரஸை ஒத்த HKU -4 என்ற வைரஸ் ஹாங்காங்கை தாக்கியது.இது அங்கு பன்றியின் மூலம் பரவியது எனினும் இதன் வீரியம் MERS -ஐ விட குறைவாகவே இருந்தது அதன் காரணங்களை விரிவாக பின்னர் பார்க்கலாம் 

கொரோனா வைரஸ்களின் பிரிவுகள் :-

படம் 2


கொரோனா வைரஸின் குடும்பத்தின் பெயர் என்ன ?
கொரோனாவிரிடே -Coronaviridae 
அதில் துணை குடும்பங்கள் எத்தனை ?அவை யாவை ?
நான்கு வகை துணை குடும்பங்கள் .அவை ,
1.ஆல்பாகொரோனாவிரிடே 
2.பீட்டாகொரோனாவிரிடே 
3.காமாகொரோனாவிரிடே 
4.டெல்ட்டாகொரோனாவிரிடே 
மனிதர்களை நேரடியாக தொற்ற கூடிய வைரஸ்கள் எந்த குடும்பத்தை சார்ந்தவை ?
பீட்டா மற்றும் ஆல்பா குடும்பத்தை சேர்ந்தவை 
சாதாரண ஜலதோஷம் உண்டாக கூடிய கொரோனவைரஸ்கள் எவை,எந்த துணைகுடும்பத்தை சேர்ந்தவை ?அவை எவ்வாறு செயல்படுகின்றன ?
அவை 229E CoV; OC 43 CoV 
ஆல்பா வகையை சேர்ந்தவை 
இவை நம் மூச்சு குழாயின் மேல்பகுதியை (மூக்கிலிருந்து தொண்டைவரை -UPPER RESPIRATORY SYSTEM-URT)மட்டுமே பெரும்பாலும் தாக்குகின்றன காரணம் அங்கு அடர்ந்து இருக்கும் சியாலிக் அமில (Sialic acid)  ஏற்பிகளாகும் (ஏற்பி -Receptor )
கொடூரமான நிமோனியாவை உண்டாக்கும் வைரஸ்கள் யாவை ?அவை எந்த துணை குடும்பத்தை சேர்ந்தவை ?அவை எவ்வாறு செயல்படுகின்றன?
MERS CoV,SARS CoV மற்றும் தற்போதைய COVID-19 ஆகியவை 
இவை பீட்டா வகையை சார்ந்தவை 
இவை பெரும்பாலும் மூச்சு குழாயின் கீழ் பகுதியில் (தொண்டை முதல் நுரையீரல் வரை -LOWER RESPIRATORY TRACT -LRT) அடர்ந்திருக்கும் ACE -2 என்ற ஏற்பிகளையே பெரும்பாலும் தாக்குவதால் இவை ஆபத்தான நிமோனியாவை உண்டாக்க வல்லவை 
இதில் MERS வைரஸும் HKU1 and 4 என்ற வைரஸும் ஒரே மாதிரி உருவ மற்றும் செயல்படும் தன்மை உடையவை ஆக இருப்பினும் MERS மனிதர்களை மிக வீரியமாக தாக்கக்கூடியது ஆகும்.
காரணம் HKU1 வைரஸ் மனிதனை தொற்றுவதற்கு ஏதோ ஒரு புரத ஊடகம் தேவை ஆனால் MERS CoV நேரடியாகவே மனிதனை தொற்றிக்கொள்ளும்.எந்த ஊடகமும் அதற்கு தேவை இல்லை.
இப்போது புதிதாக சீனாவின் ஊஹாங்கில் தொற்றி பரவி வரும் இந்த புதிய கொரோனா வைரஸ் (COVID -19)பற்றி இப்பொது புதிய ஆய்வு என்ன கூறுகிறது ?

இந்த வைரஸ் 2002-ல் சீனாவில் ஏற்கனவே தொற்றி பயமுறுத்திய SARS CoV யின் திருத்தப்பட்ட வடிவம் (MUTATED FORM)என்றும் ஒரு கருத்து மருத்துவ விஞ்ஞானிகளிடம் இப்போது ஏற்பட்டிருக்கிறது அதனால் இந்த வைரசை SARS CoV -2 என்றும் அழைக்கிறார்கள் 

பொதுவாக வைரஸ் தொற்று உடனே ஏற்படும்.ஆனால் இந்த புதிய COVID -19 தொற்றி பதினைந்து நாட்கள் வரை எடுத்துக்கொண்டு நோய் அறிகுறிகளை உண்டாக்குகிறதாமே ஏன் ?
படம்-3


படம் 4
கொரோனா வைரஸ்கள் RNA (Ribo-Nucleic Acid) வகையை சேர்ந்தவை.இவை பல்கி பெருகுவதற்கு இவற்றின் சொந்த mRNA (Messenger RNA )தேவை.ஆனால் மனித செல்களோ DNA (Deoxyribo Nucleic Acid)வகையை சேர்ந்தது.DNA கருவுக்கென்று தனி mRNA உண்டு அவை RNA கருவுக்கு ஒத்து வராது.எனவேதான் கொரோனா RNA மனித செல்லகளுக்குள் ஊடுருவிய பின் செல்களின் கருவை சிதைத்து விடும் அத்துடன் அதிலுள்ள DNA உருகுலைந்துவிடும்( பார்க்க படங்கள் 3 & 4).பிறகு வைரஸ் RNA தனது சொந்த mRNA களை உற்பத்தி செய்து சைட்டோபிளாசாமிலுள்ள புரத சத்துக்களை பயன்படுத்தி தனது வைரஸ் உற்பத்தியை பேருக்கும்.மேலும் வைரஸ் வகைகளிலேயே இந்த புதிய கொரோனா வைரஸின் RNA அடுக்கு மிகவும் நீளமானது கிட்டத்தட்ட ஒரு சங்கிலியில் சுமார் 50 க்கு மேல் யூனிட்டுகள் இருக்கும் அதனால் தான் அது நோய் குறியை வெளிப்படுத்த 15 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறது.
இப்பொது தொற்றியிருக்கும் இந்த புதிய கோவிட் -19,சார்ஸ் - CoV ,மெர்ஸ்  CoV மற்றும் HKU1 &4 இவை மட்டும் கடுமையான நிமோனியாவை உண்டாக்க காரணம் என்ன?
காரணம் அவை பெரும்பாலும் கீழ் சுவாசப்பகுதியையே குறிவைத்து தாக்குகின்றன.ஏனென்றால் அந்த பகுதியில் தான் ACE -2 ஏற்பிகள் நிறைந்திருக்கின்றன.இவற்றிக்கு ACE -2 ஏற்பிகள் மிகவும் வசதியானவை 
பொதுவாக வைரஸ்கள் எவ்வாறு மனித செல்களுக்குள் புகுகின்றன ?
அதாவது வைரஸ் என்பது ஒரு உயிரினம் அல்ல.ஏனென்றால் அவற்றிக்கு தனி செல் அமைப்புகிடையாது.பல்கி  பெருகுவதற்கு கருவோ,சைட்டோபிளாசமோ செல் சுவரோ கிடையாது.ஒரு மேல் கவர்(Envelop) அதற்குள் ஒரு கேப்சிட் (Capsid) என்ற கவர் அதற்குள் ஒரு DNA அல்லது RNA கரு அமிலங்கள் (Nucleic Acids) மட்டுமே இருக்கும்.இந்த அமைப்பிற்கு மருத்துவ மொழியில் பிளாஸ்மிடுகள் (Plasmids) எனலாம்.பிளாஸ்மிடுகளும் புரத வகையை  சேர்ந்தவைதான்.இடம் விட்டு இடம் நகரக்கூடியவை.ஆனால் உயிரற்றவை.பல்கிப்பெருக முடியாது.நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு பல்கிப்பெருக வேண்டும் அதற்கு சைட்டோபிளாசம் தேவை.மெஸ்ஸெஞ்சர் RNA (mRNA)கள் தேவை.இவை வைரஸ் அமைப்பில் இல்லை.இந்த வசதிகளுக்காகத்தான் வைரஸ்கள் மனித செல்களை குறிவைக்கின்றன 
கொரோனா வைரஸ் ஒரு செல்லை கண்டவுடன் அதன் ஏற்பியில் தன்னுடைய முட்கள் போன்ற அமைப்புகளில் ஒன்றை பொருத்துகின்றன.உடனே செல் அதை தனக்கு தேவையான புரதச்சத்து என்று ஏமாந்து கதவை திறக்கிறது.அதை பயன்படுத்தி வைரஸும் உள்ளே போய்விடும் 
இதற்கு என்டோசைட்டோஸிஸ் (Endocytosis) அல்லது பியூஷன் (Fusion ) என்பர்.
வைரஸ் உள்ளே புகுந்தவுடன் தன் RNA பொருட்களை வெளியே திறந்துவிடும். செல்களின் கருவை அழித்துவிடும் பிறகு அந்த செல்லை தன்  வசதிக்கு பயன்படுத்தி பல்கி பெருகத்துவங்கும் (பார்க்க படங்கள் 3 &4)
அறிகுறிகள் யாவை ?
1.காய்ச்சல் 
2.இருமல் 
3.சளி 
4.மூச்சு முட்டுதல் 
5.சளியுடன் இரத்தம் 
6.நிமோனியா 
7.மரணம் 
முன்னெச்சரிக்கைகள்  யாவை?
1.கூட்ட நெரிசல்களை தவிர்க்கவும் 
2.அடர்த்தியான முகமூடிகளை பயன்படுத்தவும் 
3.சோப்பு டிடெர்ஜெண்ட்டுகளை பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளவும் 
4.க்ளவ்சுகளை பயன்படுத்தவும் 
5.அல்கஹாலிக் சானிடைசர்களை கொண்டு கைகளை துடைத்துக்கொள்ளவும் 
6.வைட்டமின் சி சத்துள்ள சிட்ரஸ் வகை பழங்கள்,நெல்லிக்காய்,ப்ளூ மற்றும் ஸ்ட்ரா பெர்ரி வகை பழங்கள் ,கறி வேப்பிலை போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள் 
7.மன அழுத்தம் கவலைகள் இவற்றை தவிருங்கள் 



சிறுநீரக தொற்று நோய்கள் 

சிறுநீர் மற்றும்  சிறுநீரகத்தொற்று நோய்கள் யாவை,எவ்வாறு அவை தொற்றுகின்றன,பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்னென்ன ?-குறிப்பு வரைக :-
சிறுநீரக தொற்று நோய்கள் பலவிதமாக இருந்தாலும் அவை அனைத்துமே குறுகிய கால அல்லது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பில் கொண்டுபோய்விடும்.
சிறுநீரக தொற்றில் மிக முக்கியமானது எஷ்ரிக்கியா கோலை அல்லது ஈ கோலை (E -Coli )என்ற நுண்ணுயிரி ஆகும்.இது ஒரு G-negative நுண்ணுயிரி ஆகும் அதாவது இதை Crystal Violet நிறமியால் நிறமேற்ற முடியாது
இதே போல் மற்ற நுண்ணுயிரிகளாலும் சிறுநீரக மற்றும் சிறுநீர் பை தொற்று உண்டாகும் அவை க்ளெபசியெல்லா(Klebsiella),கிளாமிடியா(Chlamydia),என்டேரோபாக்டர் (Enterobacter),ஸ்டெபிலோகாக்கஸ் சாப்ரோபைட்டிகஸ்(staphylococcus saprophyticus)
சூடோனோமாஸ் ஏரோஜெனோசா( Pseudomonas aeruginosa)


படம் 1
ஆயினும் சிறுநீரக தொற்று பெரும்பாலும் (85%)ஈ கோலை கிருமியினாலேயே உண்டாகின்றன  மேலே படம் 1 இல் காட்டியபடி எந்த ஒரு சிறுநீர் தொற்று நோயும் முதலில் சிறுநீர் குழாயின் வழியாக மேலேறி முதலில் சிறுநீர் பையை அடைகிறது அங்கு Cysts எனப்படும் சிறு சிறு கட்டிகளை உண்டாக்குகிறது.இதை சரியாக உடனுக்குடன் கவனிக்கவில்லை என்றால் நாட்பட்ட நிலையில் மேலே படத்தில் கண்டபடி கிருமிகள் சிறுநீர் பைக்கு மேலே சிறுநீர் திரட்டு குழாய் வழியாக சிறுநீரகத்தை அடையும்.
ஈ கோலை என்றால் என்ன ?
படம் 2
எஸ்செர்ஷியா கோலையின் அமைப்பு 

ஈ கோலை என்ற எஸ்செர்ஷியா கோலை கிருமி படம் 2 கண்டவாறு தோற்றமளிக்கும்

இந்த கிருமி எவ்வாறு பரவுகிறது ?
சரியாக வேகவைக்கப்படாத அசுத்தமான மாமிச உணவுகள்(கொத்தி பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி)
காய்ச்சப்படாத பால்,
சுத்தமில்லாத வேகவைக்கப்படாத காய்கறிகள்
சுகாதார முறையில் பாதுகாக்கப்படாத பழவகைகள்
அசுத்தமான சாலடுகள் (கீரை மற்றும் இலைகள்)
மேற்குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவது மற்றும்
அசுத்தமான நீரை குடிப்பது மற்றும் அதில் குளிப்பது போன்றவற்றால் இக்கிருமி தொற்றும்
மேலும் இது மனித மற்றும் மிருக கழிவுகள் மூலமாகவும் பரவும்
ஈ கோலை நம் உடம்பில் சாதாரணமாக எங்கு இருக்கிறது ?
ஈகோலை சாதாரணமாக நம் ஒவ்வொருவரின் குடலிலும் இருக்கிறது.இது அங்கிருக்கும் வரை நமக்கு நன்மையே செய்கிறது அங்கு இது ஒரு கூட்டணியாக செயல்படுகிறது எனவே அதை மருத்துவ மொழியில் குடல் நுண்ணுயிரி கூட்டமைப்பு (GUT MICROBIOME அல்லது GUT BACTERIAL FLORA)என்று கூறுவர்
ஈ கோலை எவ்வாறு தொற்றுகிறது ?
படம் 3
மேலேயுள்ள படம் 3 இல் கவனிக்கவும்.மலத்திலிருந்து இந்த கிருமி சிறுநீர் துவாரத்தின் மூலம் நுழைந்து சிறுநீர் பையை அடைகிறது. அங்கு சிறு கட்டியை உண்டாக்குகிறது இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் மேலும் இது சிறுநீர் சேகரிப்பு  மூலமாக சிறுநீரகத்தை அடைந்து அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் (பார்க்க படம் 3)
இந்த கிருமி குடலில் இருக்கும் போது ஆபத்து எதுவும் உண்டாக்குவதில்லை
ஆனால் இது இடம் மாறி சிறுநீர் அமைப்புக்குள் போகும்போது ஆபத்தானதாக மாறி தொற்றுநோயை உண்டாக்குகிறது (பார்க்க படம் 3)
சிறுநீர் மற்றும் சிறுநீரக தொற்றின் அறிகுறிகள் யாவை?
1.சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல்
2.அடிவயிற்றில் வலி
3.குழம்பிய அல்லது இரத்த சிறுநீர்
4.சிறுநீரில் துர்நாற்றம்
5.அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு
கிருமி தொற்று மேலேறி சிறுநீரகத்தை தாக்கும் போது கீழ்கண்ட பின்விளைவுகளும் உண்டாகும்
5.ஜுரம்
6.வாந்தி,குமட்டல்
7.உடல் வலி
சில வயதான பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மற்றும் தன் உணர்வில்லாமல் சுய கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் பிரிதல் தவிர மற்ற அறிகுறிகள் மறைந்து இருக்கலாம் .
பரிசோதனைகளும்  சிகிச்சைகளும் யாவை ?
படம் 4


முதலில் சிறுநீர் பரிசோதனை அவசியம்
சிறுநீரில் சளியோ,நைட்ரைட் உப்புக்களோ அல்லது ஆல்புமினோ இருந்தால் அது சிறுநீர் தொற்றாக இருக்கலாம்
அடுத்து கிருமியை அடையாளம் காண்பதற்காக வேண்டி சிறுநீர் மாதிரியை கல்ச்சர் பரிசோதனை செய்யவேண்டும்
கல்ச்சர் பரிசோதனையின் முடிவுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகலாம்
அதுவரை மேலிட்டாற்போல் சிறுநீர் தொற்றுக்குள்ள கிருமி எதிர்ப்பங்களில் ஒன்றை மருத்துவர் பரிந்துரைப்பார் சிகிச்சையின் இந்த நிலைக்கு Empirical Treatment என்பர் .இந்த சிகிச்சை சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம்
ஆனால் கல்ச்சர் முடிவு வந்த பிறகு சரியான கிருமி அடையாளம் தெரிந்த பிறகு அந்த கிருமிக்கு ஏற்ற கிருமி எதிர்ப்பானுக்கு சிகிச்சையை அவசியமிருந்தால் மாற்றிக்கொள்ளலாம்
அல்லது ஒருவேளை மேலிட்டாற்போன்ற சிகிச்சையில் தரப்பட்ட கிருமி எதிர்ப்பானே பொருத்தமானதாக இருப்பின் அதையே தொடரலாம்
மேலே படம் 4 இல் தரப்பட்ட அட்டவணையில் எந்த எந்த கிருமிக்கு எந்த எந்த கிருமி எதிர்ப்பான் பொருந்த்தும் என்பது குறிக்கப்பட்டுள்ளது.


இருமல் மருந்துகள் பற்றி 

சமீபத்திய ஒரு ஆய்வின்படி இருமல் மருந்துகளில் Guaifenesin ஒரு முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது 
இம்மருந்து ஒரு சிறந்த சளி இளக்கியாகும்(Expectorant).இது பெரும்பாலான் மருந்து கடைகளில் OTC யில் கிடைக்கும்.இது நுண்ணுயிர் தொற்றினால் சளியுடன் வரும் இருமலை வெகு எளிதாக்கி சளியை வெளியே கொண்டு வந்துவிடும் இது Guaifenesin ER என்ற பெயரில் நீண்ட நேரம் வேலை செய்யக்கூடிய (Extended Release) ஆகவும் இருமல் மருந்துகளில் சேர்க்கப்பட்டு கிடைக்கிறது மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.
இருமல்களில் இரு வகை உண்டு 
1.வறட்டு இருமல் இதில் நுண்ணுயிர் தொற்று இருக்காது இதற்க்கு Diphenhydramin,Cromylin,Chlorpheniramin Maleate,போன்ற ஹிஸ்டமின் எதிர்ப்பான்கள் (Anti Histamins)மற்றும் அபின் கூட்டுப்பொருள் வகையைச் சேர்ந்த போதையையும் கடும் தூக்கத்தையும் தரக்கூடிய  Codeine Phosphate,Dextrometharphane போன்ற இருமல் அடக்கிகளும் (Cough suppressants)பயன்தரும் 
2.சளி இருமல் இதில் நுண்ணுயிர் தொற்று  சளியாக தொண்டையில் கட்டி இருக்கும்.இந்த சளி இளகாதவரை இருமல் ஓயாது.இதற்கு Antibiotics தரப்பட வேண்டும் என்றாலும் Antibiotics டாக்டரின் வழிகாட்டுதலின் பேரில்தான் எடுக்கமுடியும் அவற்றில் அலர்ஜி பக்க விளைவுகள் அதிகம் கவனக்குறைவாக எடுக்கப்படும் Antibiotics பிரச்சனைகளை உண்டாக்கும் 
எனவேதான் சமீபத்திய ஆய்வு சளி இருமலுக்கு எடுத்த எடுப்பிலேயே Antibiotics தருவதை விட முதலில் Guaifenesin தருவது மிகவும் நன்மை பயப்பதாக அறிந்திருக்கிறார்கள்.பெரும்பாலும் இதனால் Antibiotics எடுப்பதை தவிர்த்துகொள்ளலாம் 
இதை சாப்பிடுமுன் வெறும் வயிற்றில் எடுக்க கூடாது 
அல்சர் நோயாளிகள் சிறுநீரக கல் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது
இதை சாப்பிட்டபின் நிறைய தண்ணீர் அல்லது இதமான வெந்நீர்   குடிக்க வேண்டும்  

Updates:- 

குயினோலோன்கள் (QUINOLONS)

இவற்றின் முன்னோடி மருந்து நாலிடிக்சிக் அமிலம் (nalidixic acid )ஆகும் .சிறுநீர் தொற்றுக்கு இது இன்னமும் பயன் படுத்தப்படுகிறது இருந்தாலும் இதன் அதிக பக்கவிளைவுகள் இப்போது இதன் பயன் பாட்டை குறைத்து விட்டது இப்போது quinolones சில இரசாயன மாற்றங்களுடன் பக்க விளைவுகள் குறைந்த அதே நேரம் வீரியம் அகண்ட நுண்ணுயிர் எதிர்ப்புதன்மையும் கொண்டFlurinated 4-quinolones ஆக கிடைக்கிறது.அவற்றின் வகை பற்றி பார்க்கலாம் :-
1.Norfloxacin ;2.Pefloxacin ;3.Ciproloxacin ;4.Ofloxacin ;5.Lomefloxacin;6.Cinoxacin 
பொதுவாக இவை sulpha வைப்போல் வாய்வழியாக சாப்பிடலாம்.ஒரு 400mg எடுக்கும் அளவு இரத்தத்தில் 2 இலிருந்து 4 மணி நேரத்தில் 105mcg  /ml (NORFLOXACIN );5mcg /ml (PEFLOXACIN ) அளவு உயர்த்திவிடும் .Norfloxacin ஐ விட pefloxacin வீரியமுள்ளது என்று இதிலிருந்து தெரிகிறது.உணவுடன் சாப்பிடும் போது பொதுவாக இவற்றின் வீரியம் குறைவதால் சாப்பாட்டிற்கு சிறிது நேரம் முன்னே சாப்பிடுவது நன்று 

சாப்பிடும் அளவுகள் 

1.Norfloxacin / Pefloxacin             ----  400mg /12hrs 
2.Lomefloxacin                             ---- 400 mg /24hrs 
3.Ciprofloxacin                             ----250 mg டு 750 mg every 12hrs 

கழிவுறுதல் 

 இவற்றில் Norfloxacin ;Ofloxacin;Lomefloxacin ;Cinoxacin இவை பொதுவாக சிறுநீரகத்தின் மூலம்கழிவுருவதால் சிறுநீரக செயல்படாமை நோய் உள்ளவர்கள் கவனிக்க வேண்டும் 
Nalidixic Acid மற்றும் pefloxacin இவை உமிழ் நீரிலும் மலத்திலும் கழிவுறுகின்றன.எனவே சிறுநீரக செயல்படாமையினால் பாதிக்க பட்டவர்கள் இவற்றை டாக்டரின் சிபாரிசுடன் எடுத்து கொள்ளலாம்.அதே நேரம் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் nalidixic acid மற்றும் pefloxacin எடுக்க கூடாது 

பயன்கள் 

1.சிறுநீரக தொற்று நோய்கள் .(Drugs of Choice );
2.புராஸ்டேட் தொற்று நோய் (Prostatitis )
3.கொனேரியா (பாலியல் நோய் )
4.ஜீரண மண்டல தொற்று நோய் (E coli )
5.மூச்சு மண்டல தொற்று (H influenza )


 

அமினோ கிளைகொசைடுகள் 

1.அமினோ கிளைகொசைடுகள் யாவை ?

1.அமிகாஸின் (Amikacin )
2.நெடில்மைசின் (Netilmycin )
3.டோப்ராமைசின் (Tobramycin )
4.ஜென்டாமைசின் (Gentamycin )
5.ஸ்ட்ரெப்டோமைசின் (Streptomycin )
இவை பொதுவாக பாக்டீரியாவை எப்படி தாக்குகின்றன?
ஒவ்வொரு பாக்டீரியாவும் புரதங்கள் ஆகும்.இப்புரதங்களில் உள்ள ரிபோசோம்கள்தான் அமினோகிளைகொசைடுகளின் குறி.இவற்றை தாக்குவதன் மூலம் பாக்டீரியா புரதம் சிதைந்து விடம்.

2.அமினோகிளைகொசைடுகள் எவ்வாறு நமுடம்பில் தன்மையம்  ஆகின்றன ?

இவை உடம்பிற்குள் அத்தனை மண்டலங்களிலும்  ஊடுறுவுகின்றன நரம்பு மண்டலத்தை தவிர.அதிக அளவு உட்செல்லும்போது இவை சிறுநீரக Cortex இலும் காது உள் ஜவ்விலும் தங்குவதால் அளவு மீறி இவற்றை சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகத்திலும் காதுகளிலும் பழுது உண்டாகலாம்

3.இந்தவகை Antibiotics எவ்வாறு உட்கொள்ளப்பட வேண்டும் ?

இவை வாய் வழியாக உட்கொள்ள தகுதியற்றவை .பெரும்பாலும் சிரை ரத்த குழாய் (I.V.)மூலமே எடுப்பது சிறந்தது.Netilmycin மட்டும் களிம்புகளாக பயனாகிறது 

4.இவை எப்படி கழிவாகிறது ?

இவை ஈரலில் சமனமாகி சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது 

5.பயன்கள் யாவை?

ஜீரன மண்டலத்தை தாக்கும் குடல்கிருமிகளான E-Coli;Enterobacter;Klebsiella ;இவற்றிற்கு ;

6.தீமைகள் யாவை?

காதுகள் பழுது ;சிறுநீரக பழுது;

 

 

 

 

சல்பா மருந்துகள்

1.sulpha மருந்துகளின் மூலம் எது?

 மேலே உள்ள படத்தில் சிவப்பு வட்டத்தில் இருக்கும் பகுதிக்கு பெயர் Anilin என்பர் .இது para amino benzoic acid  அல்லது PABA என்ற மூலத்திலிருந்து உண்டாகும் .இந்த Anilin தான்  இதன் base ஆகும் 

2.Sulpha மருந்துகள் எவ்வாறு பாக்டீரியாகளை தாக்குகின்றன ?

பாக்டீரியாக்கள் உயிர் வாழ Folic Acid  தேவை.ஆனால் மனித செல்களுக்கும் அது தேவைப்படுகிறது.மனித செல்கள் தாங்களே போலிக் அசிட்களை தயாரித்து கொள்கின்றன .sulpha மருந்துகள் இதில் தலை இடுவதில்லை 
பாக்டீரியாகளும் தாங்களே Folic Acid உற்பத்தி செய்யவேண்டும்.ஏனென்றால் மனித செல்களில் தயாரிக்கப்பட்ட Folic Acid ஐ அவற்றினால் கிரகிக்க முடியாது.ஆனால் sulpha மருந்துகள் பாக்டீரியாக்களை போலிக் அமிலம் தயாரிக்கவிடாமல் செய்கின்றன.

3.sulpha மருந்துகளுக்கு உதாரணங்கள் கூறு :- 

அ .Sulphamethoxazole ;ஆ .Sulfisoxazole ;இ .Sulphamethizole ;ஈ .Sulphasalazine உ .Sulphacetamide 
ஊ .Silver Sulphadiazine ;எ .Sulfamylon ஏ Sulfadiazne 

4.Sulpha மருந்துகள் பாக்டீரியாக்களை அழிக்குமா ?

 இவை Bacteristatic ஆகும்.அதாவது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை குன்றச் செய்யும் 

5.எந்தவகை பாக்டீரியாக்களின் மீது இவை ஆதிக்கம் செலுத்தும் ?

Nocardia,வகையை சேர்ந்தவை இவை நிமோனியாவை உண்டாக்க கூடியவை அதுவும் AIDS உள்ளவர்களுக்கு இது பற்றி கொள்ளும் 
Chlamydiya இந்த வகை பாலுறுப்புகள் மற்றும் கண்களை தாக்க கூடியவை 
E-coli இந்த வகை ஜீரன மண்டலங்கள் மற்றும் சிறுநீரகங்களை தாக்கி சேதம் உண்டாக்குபவை 
Klebsiella இதுவும் ஜீரண மண்ட ம் மூக்கு தொண்டை போன்ற இடங்களில் பாதிப்பு உண்டாக்குபவை
Enterobacter இது குடலை பாதிக்க கூடியது.

6.இந்த மருந்துகளை எடுக்கும் முறைகள் யாவை ?

ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பாலான் sulpa மருந்துகள் வாய் மூலம் உட்கொள்ள கூடியவையே இவை குடலில் உறியப்பட்டு ரத்த மண்டலத்திற்குள் நுழைந்தவுடன் இரத்தத்தில் உள்ள புரதங்களான albumin ஆல்  உறிஞ்சப்படுகின்றன.சிலசமயம் இவை ஏற்கனவே albumi ஆல் உறிஞ்சப்பட்ட bilurubin என்ற மஞ்சள் நிற பித்த திட்டுகளை வெளியேற்றி விடுவதால் ரத்தத்தில் bilurubin அளவு அதிகரிக்க வாய்ப்புண்டு 

7.sulpha மருந்துகள் இரத்த மண்டலத்தில் இருந்து மூளை அல்லது நரம்பு மண்டலத்திற்குள் ஊடுருவுமா?

தாராளமாக ஊடுருவும் 

8.sulpa  மருந்துகளின் பயன்கள் யாவை?

அ . முக்கியமாக E coli ,Klebsiella  போன்றவையால் உண்டாகும் சிறுநீர் தொற்று (Urinary Track Infection )க்கு Sulfisaxole Sulfamethoxazole பயன்படுகின்றன 
 ஆ .Ulcerative colitis என்ற அல்சர் நோய்க்கு சுல்பாசலஜினே சிறந்தது.ஏனென்றால் இது குடளினால் அவ்வளவாக உறிஞ்சப்படாமல் அங்கேயே தங்கி இருக்கும் 
இ .தீப்புண் காயங்களுக்கு Silver Sulphadiazine களிம்பு சிறந்தது 
ஈ .Chlamydia திருசொமடிஸ் என்ற கிருமியினால் உண்டாகும் கண் நோய்க்கு Sulphacetamide சிறந்தது.
உ .நிமோனியாவை உண்டாக்கும் nocardiasis க்கு sulfisoxazole சிறந்தது 
ஊ .Toxoplasmosis என்ற நிணநீர் முடிச்சு வீக்கம் போன்றவற்றிற்கு sulphadiazin +pyrimethamine கூட்டு சிகிச்சை சிறந்தது

9.Sulpha மருந்துகளின் பக்க விளைவுகள் யாவை?

அ .ஒவ்வாமை
ஆ .Stevens-Jhonson's Syndrom என்ற கொடிய தோல் வியாதி
இ .வாந்தி
ஈ   .Hematolytic அனிமியா,இது இரத்தத்தில் Glucose 6-phospatedehydrogenase என்ற enzyme குறைபாடுள்ளவர்கள் sulpha மருந்துகளை எடுத்தால் வரலாம்
உ .Crystalurea (ஸ்படிகமாக சிறுநீர் வெளியேறுதல் ),மற்றும் hematurea (சிறுநீரில் இரத்தம் ).இந்த பிரச்சினைக்கு sulpha மருந்துகளுடன் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும்
ஊ .Kernicterus இரத்தத்தில் bilurubin அதிகரித்து நரம்பு மண்டலத்தி ஊடுருவுவதால் ஏற்படுவது

10.கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டுபவர்கள் இதை சாப்பிடலாமா?

கூடாது .

11.எந்தெந்த மருந்துகள் sulpha வுடன் சாப்பிடக்கூடாது ?

நீரிழிவு நோய் மருந்துகள் மற்றும் இரத்தமிளக்கியான Warfarin ஆகியவை sulpha சாப்பிட நேர்ந்தால் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற வேண்டும்

Trimethoprim

12. இது என்ன மருந்து?

இது sulpha வகையை சேர்ந்ததுதான் இத்துடன் sulphamethoxazole சேர்ந்துதான் கடைகளில் septran அல்லது septrin மற்றும் Bactrim என்ற பெயரில் கிடைக்கிறது .இந்த கலவை தனித்தனியாக sulpa வையோ அல்லது trimethoprim ஐயோ விட அதிக பலன் தரும்.

13..septran பயன்கள் யாவை?

அ .சிக்கலான திருப்பி திருப்பி வரக்கூடிய சிறுநீர் தொற்று;
ஆ .Bacterial prostitis 
இ .கொனேரியா 
ஈ சைனஸ் பிரச்சினைகள் மற்றும் Bronchitis 
உ .Acute Otitis media 
ஊ .நிமோனியா by Pneumocytis carinii (இதுவே சிறந்தது)
எ .Toxoplasmosis ..

பெனிசில்லின்:-
1.பெனிசில்லின்  எப்படி பணியாற்றுகிறது ?
    பெனிசில்லின் அதன் மூலக்கூறு அமைப்பில் இருக்கும் பீட்டா லாக்டம் சதுர வளைவின் மூலம் நுண்ணுயிரிகளை தாக்குகிறது கீழேயுள்ள அதன் மூலைக்கூறு அமைப்பை காணவும்
2.பெனிசில்லின் பாக்ட்டீரியாவின் எந்த பகுதியுடன் இணைந்து அதை  தாக்குகிறது?
    ஒவ்வொரு பாக்டீரியா செல்ல்களுக்குள்ளும் பெனிசில்லின் ஒட்டு புரதங்கள் இருக்கின்றன.இந்த புரதங்கள் தான் பாக்டீரியாவின் செல் சுவர்களை என்ஜைம்களாக இருந்து பின்னுகின்றன பெனிசில்லின் இந்த புரத என்ஜைம்களோடு ஒட்டிக்கொண்டு அவற்றை முடக்குவதால் பாக்டீரியா செல் சுவர் நசிந்துவிடுகிறது.
3பாக்டீரியாக்கள் இதிலிருந்து தங்களை எப்படி   காத்து கொள்கின்றன ?
  சில  பாக்டீரியாக்கள் பீட்டா லாக்டமேஸ் என்றொரு என்சைமை உற்பத்தி செய்து பெனிசில்லின் மூலக்கூறுவில்  உள்ள பீட்டா லாக்டம்  என்ற அமைப்பை உடைத்து பெனிசில்லினை  செயலற்றதாக்கிவிடுகின்றன .இன்னும் சில பெனிசில்லின் ஒட்டும்  புரதங்களை இடமாற்றம் செய்துவிடுகின்றன.இன்னும்சில தங்கள் செல் சுவர்களை தடிமன் ஆக பின்னுகின்றன 
4.பொதுவாக பெநிசில்லினுக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்கள் எவை ?
   செல் சுவர் இல்லாதவை 
5.பெனிசில்லின் நரம்பு மண்டலத்திற்குள் ஊடுருவுமா?
  பொதுவாகவே பெனிசில்லின் நரம்பு மண்டலத்திற்குள் வேகமாக ஊடுருவுவதில்லை .ஆனால் நம் மூளையுறைகள்  வீங்கி (Meningitis) இருக்கும் பொது பெனிசில்லின் வெகு விரைவாக  மூளை மண்டலத்திற்குள் போகும் 
6.பெனிசில்லின் எத்தனை வகைப்படும்?
 எ )இயற்கை பெனிசில்லின் (உ.ம்.)பெனிசில்லின்-G;பெனிசில்லின் -V;பெனிசில்லின்-G with Procaine(Crystallin A.S)I.m only; Penicillin-G Benzathine(Bicillin L.A,)i.m only
7. இயற்கை பெனிசில்லின்கள் எப்படி தங்களுக்குள் வேறுபடுகின்றன ?
 பொதுவாக இவற்றின் செயல்பாடுகளின் எந்த வேற்றுமையும் இல்லை .ஆனால் இவை உட்கொள்ளப்படும் முறைகளிலும் ஜீரண  நீரால் இவை தாக்கப்படும்  வேறுபடுகின்றன உதாரணமாக பெனிசில்லின் -G ஜீரண நீரால் பாதிக்கப்படும் ஆனால் பெனிசில்லின் -V பாதிக்கப்படாது .
8.இயற்க்கை பெனிசில்லினின் உபயோகங்கள யாவை?
   Streptococci ,Closteridium ,Listera ,Enterococci ,Diphtheria ,Anthrax ,Syphilis ,Treponema pallidum 
9.வாய்வழியே சாப்பிடக்கூடிய பெனிசில்லின்களை எப்படி சாப்பிடவேண்டும்?
அமாக்சிசில்லினை தவிர மற்றவை உணவினால் மந்தப்படுத்தப்படும் எனவே அவற்றை உணவுக்கு ஒரு மணி நேரம்முந்தியோ அல்லது இரண்டு மணி நேரம் பிந்தியோ எடுத்துக்கொள்ள வேண்டும் 
10.பெனிசில்லின்கள்  எப்படி கழிவுருகின்றன?
     பெரும்பாலும் கிட்னி மூலம் எவ்வித மாற்றமும் அடையாமல் வடிகட்டுதல் மூலமோ அல்லது குழாய் சுரப்பு மூலமோ பெனிசில்லின்கள் கழிவுறுகின்றன.ஆனால் Nafisillin மற்றும் Ampicillin இவை இரண்டும் கல்லீரலில் சிதைக்கப்பட்டு பித்த நீர் மூலம் மலத்தில் கழிவுறுகின்றன
11பெனிசில்லின் நச்சு விளைவுழலை பற்றி கூறுக :-
     ஒவ்வாமை:-தோல் சொறி,காய்ச்சல் ,மூட்டு வீக்கம்,மூச்சு திணறல் ஆகியவை 
       வலிப்புகள் :-சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு 
       ஜீரண கோளாறுகள் மற்றும் ஹீமோலைடிக் அனீமியா .
        சோடியம் மற்றும் பொட்டாசியம் இரத்தத்தில் அதிகரித்தல் 
12.penicillinase எதிர்ப்பு பெனிசில்லின்கள் யாவை ?
      Methicillin, I V  அல்லது I M; Naficillin PO, I M; Oxacillin P O, I M, I V 
      Dicloxacillin P O ,I M ,I V ;Cloxacillin P O ,I M ,I V  இன்னும் முழு விபரங்கள உங்கள் கம்பியூட்டரில் பதிவு செய்ய  இங்கு கிளிக் செய்யவும் 
 

 பொது

1ஆண்டிபியாட்டிக் என்றால் என்ன ?
     சில கிருமிக்களும் தாவரங்களும் தாங்களே உருவாகுகின்ற சில நச்சு பொருட்கள் பிற உயிரினங்களை அழிக்க பயன்படுவதால் அந்த வேதிப்பொருட்களை மருத்துவ உலகம் ஆன்டிபயாட்டிக்குகள் அல்லது நுண் உயிர் எதிரிகள் என்கிறது இயற்கையாக கிடைக்கும் சில நுண் உயிர் எதிரிகள் அதிக வீரியமும் நச்சு தன்மையும் கொண்டதாக இருப்பதால் பிற்காலத்தில் குறைந்த நச்சு தன்மையும் அதிக மருத்துவ பயனும் கொண்டு செயற்கையாக சில நுண்ணுயிர் எதிரிகள் உருவாக்கப்பட்டன (உ ம் )பெனிசில்லின்கள் செயற்கையாக ஆம்பிசில்லின் ,அமாக்ஷிசில்லின் ,மெதிசில்லின் என கிடைக்கிறது 
2. நுண் உயிர் எதிர்வேதிகள் (ANTIBIOTICS ) எத்தனை வகைகளாக செயல்படுகின்றன?
இரு வகைகளாக 1)நுண்உயிரிகளை அவற்றின் செல்களை பிளந்து கொல்லக் கூடிய வகை இவற்றிற்கு bacteriocides என்பர் 2)நுண் உயிரிகளை வளரவிடாமல் பலவீனப்படுத்தி அதை பெருகவிடாமல் செய்யும் ஒரு வகை.இவை நுண் உயிரிகளை பலவீனபடுத்தி நம் உடலே தன் எதிர்ப்பு சக்தியினால் அவற்றை அழிக்கும் வண்ணம் செய்பவை.இவற்றிற்கு bacteriostates என்பர் .

3.பொதுவாக நுண்ணுயிர் எதிர்வேதிகள் எப்படி செயல்படுகின்றன அவற்றிற்கு உதாரணகள் கூறு ?
a.
நுண்ணுயிரிகளின் செல் உறைகளை அதன் உருவாக்கத்திலேயே சீர் குலைப்பது (உ ம் )பெனிசில்லின்கள்,cephalosporins,vancomycin
b.
    நுண்ணுயிரிகளின் செல்களுக்குள்  உருவாகும் புரத தயாரிப்பை சீர் குலைப்பது (உ ம் )Teracyclins;Aminoglycosides;Erythromycin;Clindamycin
c.
    DNA உருவாகாமல் சீர்குலைப்பது (உ ம் )Quinolones and Fluoroquinolones
d.
    நுண்ணுயிரிகளின் செல் உறைகளை கிழித்து அதன் ஊனத்தை வெளியேற்றுதல்(உம்)Amphotericin-B
4.Bactericides உதாரணங்கள் கூறு:- Aminoglycosides;Quinolones;Vancomycin;Penicillins;Cephalosporins
5.Bacteriostatic உதாரணங்கள் கூறு:-
Chloramphenicol;Nitrofurantoin;Clindamycin;Tetracyclins;Erythromycin;Trymethoprim;Lincomycin
6.   நுண்ணுயிர் எதிர்வேதி எதிர்வினை (Antibiotic Resistance ) என்றால் என்ன ?
சில நேரங்களில் நாம் Antibiotic மருந்தை கவனமில்லாமல் அதன் முழு அளவிலும் டாக்டரின் வழிகாட்டுதலை பின்பற்றாமலும் பாதியிலேயே நோய் சரியாகிவிட்டது என்று பாதியிலேயே மருந்து சாப்பிடுவதை விட்டுவிடுவதாலும் அளவு மீறி சாப்பிடுவதாலும் நினைத்த போதெல்லாம் சாப்பிடுவதாலும் கிருமிகள்  அசாதாரண வலுப்பெற்று மருந்தை வலுவில்லாமல்  செய்துவிடும் இதுவே Antibiotic Resistance ஆகும்   

7.ஒரு நோயாளிக்கு antibiotics தரும் முன் டாக்டர்கள் கணிக்க வேண்டியவை என்ன ?
1.முதலில் வந்திருக்கு தோற்று நோய் எந்த வகை கிருமியினால் ஏற்பட்டது என்பதை அறிய வேண்டும். 
2.தரப்போகும் மருந்து எந்த அளவு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும் 
3.உடம்பின் எந்த பாகத்தில் அல்லது எந்த பாகத்தில் இருந்து தொற்று  ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் 
4.நோயாளின் கடந்த கால சிகிச்சை விவரங்களை அறிய வேண்டும்                                                                                                     

  

No comments: